மதுரை சிம்மக்கல் அருகே உள்ள வக்கீல் புது தெருவை சேர்ந்த செல்வகுமாரின் மகள் பொன் ரூபினி (17) மீனாட்சி மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் நேற்று இரவு அவர் தன்னுடைய பெரியம்மா, செல்வராணியுடன் அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரத்தில் கிடந்த சாக்கு மூட்டை ஒன்றை கவனித்த நிலையில் அருகில் சென்று பார்த்தபோது அந்த மூட்டையின் உள்ளே கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இருவரும் உடனே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பணத்தை கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
பிறகு அந்த பணத்தை எண்ணிப் பார்த்ததில் மொத்தம் 17 லட்சத்தி 49 ஆயிரம் ரூபாய் பணம் இருந்துள்ளது. இந்த பணம் யாருடையது எங்கிருந்து வந்தது என்று பல கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சிலர் அந்த பணத்தை எங்கிருந்தோ எடுத்துச் செல்லும்போது பயத்தில் சாலை ஓரத்தில் வீசி இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். இந்நிலையில் சாலையில் கிடந்த பெரிய தொகையை தான் எடுத்துக் கொள்ளாமல் நேர்மையுடன் போலீசில் ஒப்படைத்த அந்த மாணவிக்கு போலீசார் பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…