மனசாட்சியே இல்லையா.? 3 வயது குழந்தையின் வாயில் டேப் ஒட்டி கொடூரமாக தாக்கிய பள்ளி முதல்வர்… காரணத்தை கேட்டதும் அதிர்ந்து போன பெற்றோர்..!!

By Soundarya on ஆவணி 2, 2025

Spread the love

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராதே- ராதே என்று சொன்னதற்காக மூன்று வயது சிறுமியை பள்ளி முதல்வர் கொடூரமாக தாக்கி வாயில் டேப் ஒட்டியுள்ளார். இந்த சம்பவமானது அங்கு உள்ள மதர் தெரசா ஆங்கில வழிப் பள்ளியில் நடந்துள்ளது. மூன்று வயது சிறுமியை உடல் ரீதியாக சித்தரவதை செய்ததையடுத்து சிறுமியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார் .

இதுகுறித்த விசாரணையில், சம்பவத்தன்று அந்த பள்ளியின் முதல்வரை ராதே -ராதே என்று அந்த மூன்று வயது சிறுமி வரவேற்று இருக்கிறார். இதனால் கோபமடைந்த முதல்வர் அந்த சிறுமியை அடித்துள்ளார்.  பிறகு சுமார் 15 நிமிடங்கள் வாயில் டேப்பை வைத்து ஒட்டியுள்ளார். மேலும் உடல் ரீதியான தண்டனைகளையும் கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி வீடு திரும்பியதும் அழுது கொண்டே தன்னுடைய பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியிருக்கிறார். அதன்பின்னர் தான் போலீசில் பெற்றோர் புகார் அளித்துள்ளார்கள்.