காங்கிரஸ் மாநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், “மக்களவை தேர்தலில் 15 இடங்கள் மோசடி செய்யாமல் இருந்திருந்தால் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக ஆகி இருக்க முடியாது. இந்த ஆதாரத்தை கண்டுபிடிக்க ஆறு மாதங்கள் இடைவிடாமல் உழைத்தோம். வாக்களித்த 6.5 லட்சம் வாக்காளர்களில் 1.5 லட்சம் பேர் போலியானவர்கள் என்று பரபரப்பு தகவலை கூறியிருக்கிறார்.
மேலும் இந்தியாவின் தேர்தல் முறை இறந்துவிட்டது. மிக குறைந்த பெரும்பான்மையுடனே இந்தியாவின் பிரதமராகியுள்ளார் மோடி. மக்களவைத் தேர்தலில் பாஜக அரசு எவ்வாறு மோசடி செய்தது என்பதை இன்னும் சில நாட்களில் ஆதாரத்தோடு நிரூபிக்க போகிறோம் என்று கூறியுள்ளார்.
