தமிழகம் முழுவதும் பள்ளிகளில்… அடுத்த கல்வியாண்டு முதல் பாடத்திட்டம் மாற்றம்…. வெளியான திடீர் அறிவிப்பு…!

By Nanthini on கார்த்திகை 25, 2025

Spread the love

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தை புதுப்பிப்பதற்கான உயர் மட்ட வல்லுநர் குழு மற்றும் புதிய கலைத்திட்ட வடிவமைப்பு குழு கூட்டம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அடுத்த மார்ச் மாதம் வரை இதுபோன்று கூட்டம் நடத்தப்படும். 2026-27 கல்வியாண்டில் 1 ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு வரை என்ன மாதிரியான திட்டங்களை கொண்டு வரலாம் என்று ஆலோசிக்கப்படும். படிப்படியாக அடுத்தடுத்த வகுப்புகளுக்கும் இதுபோன்று ஆலோசனை நடத்தப்படும்.

புரிதலுடன் மாணவர்கள் படிப்பதற்கு தேவையான பாடத்திட்டங்கள் குறித்தும் ஆசிரியர்களுக்கு எப்படி பயிற்சி கொடுக்கப் போகிறோம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்தப்படும். அதே சமயம் அடுத்த கல்வியாண்டு முதல் மாநில கல்வி கொள்கை அடிப்படையில் படிப்படியாக பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது இந்த அறிவிப்பை வெளியாகி உள்ளது.