தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவில் உட்கட்சி விவகாரம் நாளுக்கு நாள் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. கட்சியில் தனக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை நீக்கிவரும் இபிஎஸ் சமீபத்தில் செங்கோட்டையன் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை நீக்கினார். தற்போது அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் நால்வர் அணியாக பிரிந்து நிற்கின்றனர்.
அதன்படி சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோருடைய அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு, அதிமுக தொண்டர்கள் உரிமைக் கழகமாக மாறியுள்ளதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார். 3 ஆண்டுகளாக கொடுத்த ஆதரவு, தியாக உணர்வு செயல்பாடுகளுக்கு நன்றி கடன் பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் இன்னும் ஒரு மாதத்தில் அதிமுக இணையாவிடில் தனி கட்சியாக உருவெடுப்போம் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
