திடீரென குறைந்த வட்டி விகிதம்.. SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்..!

By Nanthini on ஆனி 18, 2025

Spread the love

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றுதான் sbi. மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது இந்த வங்கியில் அதிக வட்டி வழங்கப்படுவது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கும் பலவிதமான சலுகைகள் உண்டு. அதனால் இந்த வங்கியில் ஏராளமான வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ளனர். இப்படியான நிலையில் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி பொதுமக்கள் சேமிப்பு காண ஆண்டு வட்டியை 2.7 சதவீதத்திலிருந்து 2.5% குறைத்துள்ளது.

இந்த மாற்றப்பட்ட புதிய வட்டி விகிதம் கடந்த ஜூன் 16ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதனைப் போலவே ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதமும் பொதுமக்களுக்கு 6.25%, மூத்த குடிமக்களுக்கு 6.75 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேமிப்பு நாட்களுக்கு ஏற்றது போல வட்டியில் மாற்றம் இருக்கும். ஐ சி ஐ சி ஐ மற்றும் எச்டிஎப்சி வங்கிகளும் வட்டியை குறைத்துள்ளன. இந்தச் செய்தி வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.