விக்ரம் படத்துல சத்யராஜ் பயன்படுத்திய அந்த சூப்பர் கண்ணாடிக்குப் பின்னடி இப்படி காரணம் இருக்கா?.. உண்மையிலேயே கமல் ஜீனியஸ்தான்!

By vinoth on ஆனி 18, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக தோன்றி பின்னர் வில்லனாக உருவானவர் சத்யராஜ். தன்னைப் பற்றி பேசும் போது ‘வில்லன் கூட்டத்தில் ஒருவனாக இருந்து ‘எஸ் பாஸ்’ சொல்லியே நான் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன் எனக் கூறியுள்ளார். அதன் பிறகு பாரதிராஜா மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இயக்கத்தில் அவர் நடித்த படங்கள் அவரை கதாநாயகனாக்கின.

தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். ஹீரோவாக நடித்த போது தமிழில் மட்டுமே நடித்து வந்த சத்யராஜ், இப்போது பிறமொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். சத்யராஜுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.  மகன் சிபிராஜ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இப்போதும் தன் மகனை விட பிஸியான நடிகராக இருந்து வருகிறார் சத்யராஜ்.

   

2005 வரை ஹீரோவாக நடித்து வந்த சத்யராஜுக்கு அப்போது மார்க்கெட் சரிய ஆரம்பித்தது. அதனால் அவர் மீண்டும் குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் முடிவை எடுத்தார். சத்யராஜ் வில்லனாக நடித்த காலத்தில் அவருக்கு சிறப்பான வேடத்தைக் கொடுத்தவர்களில் நடிகர் கமல்ஹாசனும் ஒருவர். அவருடன் சத்யராஜ் நடித்த காக்கிச்சட்டை, விக்ரம் மற்றும் சட்டம் என் கையில் ஆகிய திரைப்படங்கள் சத்யராஜை புகழ் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தன.

   

காக்கிச் சட்டை படத்தில் தகடு தகடு வசன்மும், விக்ரம் படத்தில் அவர் அணிந்திருந்த வித்தியாசமான கண்ணாடியும் சத்யராஜை தனித்துக் கவனிக்க வைத்தன. விக்ரம் படத்தில் அவர் அணிருந்திருக்கும் கண்ணாடி ஒருபுறம் சாதாரணமாகவும் இன்னொரு புறம் கருப்பு நிற கூலிங் கிளாஸ் போலவும் இருக்கும்.

 

அதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கிறதாம். படத்தில் சத்யராஜுக்கு ஒரு பக்கம் கருவிழியே இல்லாமல் வெள்ளையாக இருப்பது போல கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளார்கள். ஆனால் படம் முழுவதும் அவர் அப்படி வந்தால் ஒரு மாதிரி இருக்கும் எனக் கூறி கமல்தான் இந்த கண்ணாடி யோசனையைக் கொடுத்தாராம். அதனால் படத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் சத்யராஜ் கண்ணாடியைக் கழட்டி தனது வித்தியாசமான கண்ணைக் காட்டுவது போல எடுத்திருப்பார்கள். ஆனால் படம் ரிலீஸான போது சத்யராஜின் அந்த கண்ணாடி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதாம்.