பிரபல நடிகரான சத்யராஜ் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை தன்வசம் ஈர்த்தவர். மாபெரும் பட்ஜெட் திரைப்படமான பாகுபலி படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
பாகுபலி படத்தில் சத்யஇராஜின் நடிப்பு அசத்தலாக இருந்தது. அடுத்ததாக பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தில் சத்யராஜ் இருப்பதாக செய்திகள் உலா வருகிறது. தற்போது அவருக்கு 69 வயது ஆகிறது.
இந்த நிலையில் சத்யராஜ் மொட்டை மாடியில் நின்று சிலம்பம் சுற்றியுள்ளார். அந்த வீடியோவை அவரது மகள் திவ்யா சத்யராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சத்யராஜ் குகன் சென்னியப்பன் இயக்கத்தில் உருவாகும் வெப்பன் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் வசந்த் ரவி சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 69 வயதிலும் சத்யராஜ் எனர்ஜிடிக்காக இருக்கிறாரே என அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram