ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எப்படி இருப்பதால் படக் குழுவினருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் உணவு பரிமாறிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அயலான் என்கின்ற வெற்றி படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கமிட்டாகி இருந்த திரைப்படம் தான் அமரன். ராணுவ உயர் அதிகாரியாக முகுந்தன் என்கின்ற கேரக்டரில் சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடித்திருக்கின்றார்.
படத்தின் காட்சிகள் காஷ்மீரின் பனி படர்ந்த இடங்களில் மிகுந்த ஒரு ரிஸ்க்குடன் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்திருக்கின்றார். இந்த திரைப்படத்தை நடிகர் கமலஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் தயாரித்திருக்கின்றார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் தான் படமாக்கப்பட்டது.
பனிபடர்ந்த சூழலில் அதிக ரிஸ்க் உடன் இந்த காட்சிகள் எடுக்கப்பட்டது. மேலும் காஷ்மீர், சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் சூட்டிங் எடுக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் சூட்டிங் நேற்று சென்னையில் நடைபெற்று வருகின்றது. படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள காரணத்தினால் தற்போது அமரன் பட குழுவினருக்கு சிவகார்த்திகேயன் பிரியாணி விருந்து கொடுத்திருக்கின்றார்.
தனது கையாலேயே பட குழுவினர் அனைவருக்கும் பிரியாணி பரிமாறிய வீடியோ இணையத்தில் வெளியாகிய வைரலாகி வந்தது. இதைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அடுத்த திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். அந்த படத்தில் இருந்து சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு பின்னர் அமரன் திரைப்படத்தின் மீதி ஷூட்டிங் நிறைவு செய்ய இருப்பதாக கூறப்பட்டு வருகின்றது.
. #Sivakarthikeyan anna Serving briyani to full unit of #Amaran pic.twitter.com/M4ONS8Ij0J
— Chichilubu Guru 🔱Sk💙❼ (@guruawesome) May 24, 2024
கடந்த ஜனவரி மாதம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் சுமாரான வெற்றியை கொடுத்த நிலையில் இந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.