ஆண்டுக்கு 63 மில்லியன் இந்தியர்கள் பாதிப்பு.. மக்கள் நலனுக்காக பிரச்சாரம் செய்த சத்யராஜ் மகள்.. வைரலாகும் வீடியோ..!

By Mahalakshmi on ஜூன் 25, 2024

Spread the love

சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் உன் உயிர் உன் கையில் என்ற பதாகையை ஏந்தி புரட்சி செய்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சத்யராஜ். 80 மற்றும் 90களில் பல நடிகர்களுக்கு வில்லனாகவும், ஹீரோவாகவும் நடித்து வந்த இவர் தற்போது சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், பெரும்பாலான நடிகர், நடிகைகளுக்கு தந்தை கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகின்றார். அன்று முதல் இன்று வரை இவரது மவுசை குறையாமல் இருந்து வருகின்றது.

   

   

தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். மகன் சிபி சத்யராஜ் சினிமாவில் நடித்து வருகின்றார். ஆனாலும் தந்தை அளவுக்கு பிரபலமாக முடியவில்லை. இவரது மகள் திவ்யா சத்யராஜ் மருத்துவத்துறையில் ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகின்றார். மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த பல சேவைகளை செய்து வரும் இவர் சமூக நலன் மீது அக்கறை கொண்டவர்.

 

அவ்வப்போது விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது ஒரு விழிப்புணர்வு வீடியோவை தான் வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் கூறியிருந்ததாவது “இந்தியாவில் மட்டும் மருத்துவச் செலவுகள் ஆண்டுக்கு 63 மில்லியன் இந்தியர்களை வறுமைக்கு தள்ளுகின்றது. எம்ஆர்ஐ, சிடிஎஸ் ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் போன்ற சேவைகளுக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக அளவு கட்டணம் வசூலிக்கின்றன. இந்த விலைகள் சாமானியர்களுக்கு மிக அதிகமாக இருக்கின்றது.

நான் மகிழ்மதி இயக்கம் என்கின்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கினேன். குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு சத்தான உணவை இலவசமாக இந்த நிறுவனத்தின் மூலமாக வழங்கி வருகிறோம். மேலும் நாங்கள் நோயாளிகளுக்கு ஆதரவு சேவைகளையும் வழங்குகின்றோம். எம்ஆர்ஐ மற்றும் இமேஜின் சேவைகளில் விலையை குறைக்க தனியார் மருத்துவமனிடம் கூறிய போது எங்களிடம் சிறந்த இயந்திரங்கள் உள்ளன, ஏழைகள் அரசு மருத்துவமனைக்கு செல்லட்டும்.

இயந்திரங்களை பராமரிக்க எங்களுக்கு பணம் தேவை போன்ற விளக்கங்களை எங்களுக்கு வழங்கியிருந்தார்கள். அப்போலோ மருத்துவமனை ஒரு நாளைக்கு 5000க்கும் மேற்பட்ட எம்ஆர் ஐ மற்றும் பிற சேவைகளை செய்து வருகின்றது. ஒரு முழு உடல் எம்ஆர்ஐ ஸ்கேனின் விலை 40 ஆயிரம், எம்ஆர்ஐ மற்றும் பிற ஸ்கேன்களின் விலையை குறைக்க கோரி தனது தொண்டு நிறுவனத்தின் தன்னார்வ தொண்டர்களுடன் இந்த பிரச்சாரத்தை செய்து வருகிறோம்.

அப்போலோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி ‘உங்களுக்கு தெரியும். உடல் நலம் என்பது பணத்திற்காக அல்ல, அது வாழ்க்கையை பற்றியது. எங்கள் அறிக்கையை மதிக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் கூறியிருந்தார். மேலும் எனது பிரச்சாரத்திற்கு ஆதரவு வழங்கிய எனது தந்தை சத்யராஜ் அவருக்கு மனமார்ந்த நன்றி என்றும், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.  அவர்களுக்கு மனமார்ந்த நன்றி என தெரிவித்திருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Divya Sathyaraj (@divya_sathyaraj)