உலகளவில் வணிக சினிமாவின் தலைநகரமாக இருக்கிறது அமெரிக்கா. அந்தளவுக்கு சினிமாவை அதிகளவில் உற்பத்தி செய்வதாகவும் அதன் வியாபார எல்லைகளைப் பெருக்குவதாகவும் உள்ளது. அமெரிக்க அளவில் செய்யப்படும் சினிமா சம்மந்தமான மதிப்பு உலகின் பல நாடுகளின் மொத்த சினிமா சந்தையை விடக் குறைவாகதான் இருக்கும்.
அமெரிக்காவின் சினிமா கேந்திரமான ஹாலிவுட் உலகளவில் புகழ் பெற்ற ஒரு நகரம். அங்கு இன்னமும் சினிமா ஸ்டுடியோக்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அந்தளவுக்கு கெடுபிடிகள் அதிகம். இந்நிலையில்தான் இந்திய சினிமாவின் ஜாம்பவான் இயக்குனர்களில் ஒருவரான சத்யஜித் ரே தன்னுடைய கதை ஹாலிவுட்டில் திருடப்பட்டுள்ளது எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
ஸ்பீல்பெர்க்கின் ET படம் வெளியான சில ஆண்டுகளில் அது தன்னுடைய ‘ஏலியன்’ என்ற கதையைத் திருடி உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய ஜாம்பவான் இயக்குனர் சத்யஜித் ரே குற்றம் சாட்டினார். தன்னுடைய ஏலியன் கதை பல ஸ்டுடியோக்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் அதில் இருந்து பல சீன்கள் காப்பி அடிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

இது குறித்து மேலும் பேசியுள்ள அவர் “நான் ஏலியன் கதையை கொலம்பியா உள்ளிட்ட பல ஸ்டுடியோக்களில் சொல்லியுள்ளேன். என்னுடைய திரைக்கதை பிரதிகள் பல அங்குள்ள ஸ்டுடியோக்களில் உள்ளன. ஈ டி படத்தில் பல காட்சிகள் என்னுடைய திரைக்கதையில் இருந்து உருமாற்றப்பட்டுள்ளன” எனக் கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை ஹாலிவுட் ஸ்டுடியோக்களோ அல்லது இயக்குனர் ஸ்பீல்பெர்க்கோ பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் இயக்குனர் சத்யஜித் ரேவுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டதற்குப் பின்னணியில் ஸ்பீல்பெர்க்தான் என்று சொல்லப்படுவதுண்டு.
