தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் அரங்கேறியுள்ள வினோதமான திருட்டுச் சம்பவம் ஒன்று பொதுமக்களிடையேயும் இணையவாசிகளிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் பகுதிநேர ஊழியராகப் பணிபுரியும் நடராஜர் என்பவர், வழக்கம்போல் பணிக்கு வந்தபோது மருத்துவமனை வளாகத்தில் தனது மிதிவண்டியை நிறுத்தியிருந்தார். நள்ளிரவில் அந்த மிதிவண்டி திடீரென மாயமானதால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் காவல்துறையினர் மருத்துவமனை வளாகத்திலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, முதலூர் பகுதியைச் சேர்ந்த ஜேக்கப் என்பவர் அந்த மிதிவண்டியைத் திருடிச் சென்றது தெரியவந்தது. மிதிவண்டியைத் திருடிக்கொண்டு தப்பிய ஜேக்கப், வழியில் சாத்தான்குளம் மெயின் பஜாரில் உள்ள ஒரு டீக்கடைக்குச் சென்றுள்ளார். அங்கு டீ குடித்துக்கொண்டிருந்தபோதே, கடையின் கல்லாப்பெட்டியைக் கவனமாகக் கண்காணித்து வந்துள்ளார்.
சரியான சமயத்திற்காகக் காத்திருந்த ஜேக்கப், கல்லாப்பெட்டியில் இருந்த ஊழியர் இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்ற இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டார். நொடிப்பொழுதில் கல்லாப்பெட்டியைத் திறந்து அதிலிருந்த ரூ.9,300 ரொக்கப் பணத்தை நைஸாகச் சுருட்டினார். மேலும், தான் குடித்த டீ மற்றும் வாங்கிய சிகரெட்டுக்கான கட்டணத்தையும், தான் திருடிய அதே பணத்திலிருந்தே எடுத்து கடை ஊழியரிடம் கொடுத்துவிட்டு, பணத்தை எண்ணிப்பார்த்தபடியே அங்கிருந்து மிதிவண்டியில் தப்பியோடிவிட்டார்.
கடைக்குத் திரும்பிய ஊழியர் கல்லாப்பெட்டியில் பணம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உரிமையாளருக்குத் தகவல் தெரிவித்தார். கடையின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளின் துணையோடு துரிதமாகச் செயல்பட்ட காவல்துறையினர் ஜேக்கப்பைக் கைது செய்தனர். திருடிய பணத்திலேயே டீ, சிகரெட் வாங்கிவிட்டு மிதிவண்டியில் தப்பிய இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…
புனே அருகேயுள்ள லோனி கல்போர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல 'ஜகதம்பா' உணவகத்தில், உணவிற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியதை…
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில் தீபாவளி பண்டிகையின்போது நூதனமான முறையில் யுபிஐ பண மோசடி நடைபெற்றுள்ளது. பீபால் சௌராஹா…
உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள சந்திபான் காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், இயங்கும் மோட்டார் சைக்கிளின்…
தெலங்கானாவில் கள்ளக்காதல் விவகாரத்தை வெளியே சொல்லிவிடுவேன் என மிரட்டிய பள்ளி மாணவனை, திருமணமான ஒரு பெண்ணும் அவரது காதலனும் சேர்ந்து…
பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில், ஏற்கனவே பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், மீண்டும் கொடூரமாகத் தாக்கப்பட்டு வீட்டின் மாடியிலிருந்து…