அய்யோ… பின்னாடி யாருமில்லை… எல்லாம் அவருதான்… விஜய்யை இயக்குவது யார்?…. பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி… வைத்த சசிகுமாரின் அதிரடி பேட்டி…!!

By Swetha on ஆவணி 1, 2026

Spread the love

நடிகர் விஜய்யின் அரசியல் அறிமுகம் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் குறுகிய கால பிரம்மாண்ட வளர்ச்சி குறித்து பிரபல நடிகரும் இயக்குநருமான எம். சசிகுமார் தெரிவித்த கருத்துகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சினிமா உலகின் உச்சத்தில் இருக்கும்போதே அதைத் துறந்து முழு நேர அரசியலில் களம் இறங்கிய விஜய்யின் முடிவு பெரும் விவாதங்களை ஏற்படுத்திய நிலையில், சசிகுமாரின் இந்த ஓபன் டாக் தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேட்டி ஒன்றில் விஜய்யின் அரசியல் பயணம் குறித்துப் பேசிய சசிகுமார், “விஜய் சாரோட வெற்றிக்கு அவருடைய நம்பிக்கைதான் காரணம். அதற்கு யாரும் பங்கு போட முடியாது. ‘நான் நினைச்சேன் அவரு இப்படி வருவாருன்னு’ சிலர் சொல்வதெல்லாம் தவறு; அவர் நினைத்தார், தன்னம்பிக்கையோடு தளராமல் இருந்தார். கட்சி ஆரம்பித்து குறுகிய காலத்தில் இவ்வளவு தூரம் வளர்ந்தது அவருக்கு மட்டுமே சொந்தமான விஷயம்” என்று அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். விஜய்யின் வளர்ச்சியைத் தங்கள் கணக்கில் எழுதத் துடிக்கும் சில குரல்களுக்கு இது சம்மட்டி அடியாக அமைந்துள்ளதாக இணையவாசிகள் கூறி வருகின்றனர்.

   

சினிமா பயணத்தின் தொடக்கத்தில் பல கடுமையான விமர்சனங்களைச் சந்தித்த விஜய், தன் உழைப்பால் எப்படி உச்சம் தொட்டாரோ அதேபோல் அரசியலிலும் தன் சுய நம்பிக்கையாலேயே தடைகளைக் கடந்து வருகிறார். “யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள்” என்ற பிம்பங்களை உடைத்து, தன் சொந்த முடிவாலும் மக்கள் மீது கொண்ட நம்பிக்கையாலும் தான் அவர் இந்த உயரத்தை அடைந்துள்ளார் என்பதைச் சசிகுமார் சுட்டிக்காட்டியுள்ளார். சுருக்கமாகச் சொன்னால், தவெகவின் இந்த பிரம்மாண்ட அரசியல் எழுச்சிக்கு விஜய்யின் தளராத தன்னம்பிக்கையும் சுய உழைப்புமே முழு முதற் காரணம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.