முதல்வர் விஜய்யின் குடும்பத்தில் நிலவிவந்த விரிசல்கள் விரைவில் முடிவுக்கு வந்து, அவர்கள் மீண்டும் ஒன்றிணையப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி வழக்குத் தொடர்ந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவர்களது மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் ஆகியோர் விஜய்யை விட்டு விலகியே இருந்து வந்தனர். இதுவரை பொது மேடைகளிலோ அல்லது பேட்டிகளிலோ தனது தந்தையைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து வந்த ஜேசன் சஞ்சய், சமீபகாலமாகத் திரையுலகில் இயக்குநராகத் தடம் பதிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
இந்நிலையில், ஜேசன் சஞ்சய் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்று சினிமா வட்டாரத்திலும் விஜய் ரசிகர்களிடையேயும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இதுவரை அமைதி காத்து வந்த அவர், முதன்முறையாகத் தனது அப்பாவை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். இந்த ஒற்றை வார்த்தை விஜய்யின் குடும்பம் மீண்டும் ஒன்று சேரப் போகிறது என்ற தகவலை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. அப்பா-மகன் இடையேயான இந்த நேர்மறை மாற்றம், விஜய்யின் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
