Categories: சினிமா

நான் பாலா சாரிடம் இருந்து வெளியே வரக் காரணம் இதுதான்… பல வருடங்களுக்குப் பிறகு மனம்திறந்த சசிகுமார்!

Spread the love

சுப்ரமண்யபுரம் என்ற கல்ட் கிளாசிக் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் சசிகுமார். அந்த படத்தின் வெற்றியில் நடிகர் சசிகுமார் வெற்றி பெற, இயக்குனர் சசிகுமாருக்கு நீண்ட ஓய்வை கொடுத்துவிட்டார்.

அதன் பின்னர் அவர் ஈசன் என்ற ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கினார். நாடோடிகள், சுந்தரபாண்டியன் என அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாக தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு மினிமம் கியாரண்டி நடிகராக உருவானார்.

அவர் நடித்த சில படங்கள் சூப்பர் ஹிட்டானதும், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டன. சமீபகாலமாக அவர் படங்கள் எதுவும் ஹிட்டாகாத நிலையில் சமீபத்தில் அயோத்தி மற்றும் நந்தன் ஆகிய கதையம்சம் உள்ள படங்கள் மூலமாகக் கம்பேக் கொடுத்துள்ளார்.

சசிகுமார் தமிழ் சினிமாவில் முதல் முதலாக அறிமுகமானது பாலாவின் சேது படம் மூலமாகதான். அந்த படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய சசிகுமார், அதன்பின்னர் நந்தா படத்திலும் பணியாற்றினார். அதன் பின்னர் இயக்குனர் அமீர் மௌனம் பேசியதே தொடங்கியதும் அவருடன் இணைந்துகொண்டார்.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் ஏன் தொடர்ந்து பாலாவிடமே வேலை செய்யாமல் அமீரிடம் வந்தார் என்பது குறித்து பேசியுள்ளார். அதில் “பாலா சார் மீது எப்போதுமே மரியாதையும் ஒரு பயமும் இருந்தது. ஆனால் அமிர் அண்ணன் அப்படி அல்ல. அவரிடம் ஒரு நட்புணர்வும் சகோதரத்துவமும் இருந்தது. அதனால் அவருடன் வந்துவிட்டேன். மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை.

இது சினிமாவில் இயல்பாக நடப்பதுதான். பாக்யராஜ் சார் முந்தானை முடிச்சு பண்ணும் பாண்டியராஜன் சார் தனியாகப் படம் பண்ண சென்றதும் ஜி எம் குமார், லிவிங்ஸ்டன் எல்லாம் சென்றுவிட்டதாக பாக்யராஜ் சார் ஒரு நேர்கானலில் கூறினார். அதுபோலதான்” எனப் பேசியுள்ளார்.

vinoth

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

6 மணத்தியாலங்கள் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

6 மணத்தியாலங்கள் ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

6 மணத்தியாலங்கள் ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

6 மணத்தியாலங்கள் ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

6 மணத்தியாலங்கள் ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

6 மணத்தியாலங்கள் ago