உண்மைய சொல்லாம என்ன ஏமாத்திட்டீங்க… சுப்ரமணியபுரம் ஷூட்டிங்கில் சசிகுமாரிடம் அழுத ஸ்வாதி- அப்படி என்ன மறைத்தார் தெரியுமா?

By vinoth on ஜூன் 26, 2024

Spread the love

2008-ம் ஆண்டு இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் சுப்ரமணியபுரம். மதுரை கதைகளத்தில் அழுத்தமான திரைக்கதை மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த சுப்ரமணியபுரம் திரைப்படம் வசூல் ரீதியாவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றது. படத்தின் நாயகனாக ஜெய் நடிக்க அவருக்கு ஜோடியாக சுவாதி நடித்திருந்தார்.

மேலும் இவர்களுடன் இயக்குனர் சசிகுமார், சமுத்திரகனி, கஞ்சா கருப்பு ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்திருந்தனர். இயக்குனர் சசிகுமாரின் தயாரிப்பு நிறுவனமான கம்பெனி புரொடக்ஷன் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்ய ராஜ முஹமத் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

   

இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இன்று வரை ஒரு கல்ட் கிளாசிக் படமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் வரும் க்ளைமேக்ஸ் காட்சியை எப்படி படமாக்கினேன் என்பது குறித்து சசிகுமார் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

   

அந்த நேர்காணலில் சசிகுமார் கூறியது…

 

நான் செஞ்ச உருப்படியான விஷயம் நான் யாருக்கும் கதை சொல்லலை. கேமரா மேன் கதிருக்கு மட்டும் தெரியும். எடுக்கப் போகும் காட்சியை நடிகர்களிடம் காலையில் சொல்லுவேன். டயலாக் அதிகம் இருந்தால் முந்தைய நாள் இரவு கொடுப்பேன். க்ளைமேக்ஸ் காட்சியைப் பற்றி சொன்னேன். ஜெய் கலங்கிட்டான். சுவாதி அங்கிருந்து எழுந்துபோய் அறையில் அழ ஆரம்பித்துவிட்டது.

அறையிலிருந்து போன் செய்து ‘அப்ப நான் என்ன முதுகுல குத்துற ஆளா?’ என்று கேட்டு புலம்ப ஆரம்பிச்சிருச்சு. கதாபாத்திரத்தோடு அவர்கள் ஒன்றிப் போயிருந்தது எனக்கு சந்தோஷம் கொடுத்தது.

சுவாதி என்னிடம்‘நீங்க ஏன் என்கிட்ட  க்ளைமாக்ஸை சொல்லல?.’

‘நாந்தான் சொன்னேனே நீ சாக மாட்டேன்னு.’

‘இதுக்கு நான் செத்திருக்கலாம்.’

அந்த மூட் சரியாக இருந்தது. காட்சி எடுக்க அந்த மனநிலைதான் தேவைப்பட்டது. ‘இப்படியே இருங்க. யாரிடமும் பேசக்கூடாது’ என்று ஜெய்யிடம் சொல்லிவிட்டேன்.

‘சேர்த்து வைச்சிரலாமே. ஏன் இப்படி கொடுமைப்படுத்துற’ன்னு கனி கேட்டார். காட்சிகள் எடுத்து முடித்ததும் நான் அவர்களிடம் சொல்லாததன் காரணத்தைச் சொன்னேன்.

முதலிலேயே முடிவு தெரிந்தால் ‘சிறு பொன்மணியில்’ உனக்கு வெட்கம் வராது. ஜெய்க்கு உன் மேல் காதல் வராது. இறுதியில் சொன்னதால் உனக்கு ஷாக். அதுதான் எனக்குத் தேவைப்பட்டது.