பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினி ஆகவும் நடுவராகவும் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் குஷ்பூ நடித்த கிழக்கு வாசல், சின்னத்தம்பி, நாட்டாமை, காத்திருக்க நேரமில்லை, கல்யாண கலாட்டா உள்ளிட்ட படங்கள் மக்களிடைய நல்ல வரவேற்பு பெற்றது. அந்த காலகட்டத்தில் குஷ்பூ இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். சுமார் 16 வருடம் குஷ்பூ முன்னணி கதாநாயகியாக விளங்கினார். கடந்த 1988-ஆம் ஆண்டு தர்மத்தின் தலைவன் படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் ரஜினிகாந்த், பிரபு, எஸ்.பி முத்துராமன், சுகாசினி, குஷ்பூ ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தனர்.
இந்த நிலையில் குஷ்பூ சமீபத்தில் அளித்த பேட்டியில் தர்மத்தின் தலைவன் பட ஷூட்டிங்கில் நடைபெற்ற அனுபவங்கள் குறித்து பேசி உள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு சுகாசினியை பார்த்தாலே அப்போது எல்லாம் பயமாக இருக்கும். அவங்க அப்படியே டீச்சர் மாதிரி இருப்பாங்க. முதலில் எனக்கு தெரிந்தது பிரபு மட்டும்தான். ரஜினிகாந்த் சார், சுஹாசினி என யாரையும் எனக்கு தெரியாது.
ஒரு நாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபு என் கன்னத்தை பிடித்து டயலாக் சொல்வது போல சீன் இருந்தது. திடீரென அவர் என் கன்னத்தைப் பிடித்து அப்படியே இட்லி மாதிரி இருக்கு என சொன்னார். யாருமே அதை எதிர்பார்க்கவே இல்லை. அன்றிலிருந்து குஷ்பூ இட்லி என சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. அதிலிருந்து தான் குஷ்பூ இட்லி, குஷ்பூ டீ, குஷ்பு கோவில் அப்படின்னு வளர்ந்து கொண்டே போச்சு. அதை ஆரம்பித்து வைத்தது பிரபு தான். இன்னைக்கு வரைக்கும் அது மாறவே இல்லை என பேட்டியில் கூறியுள்ளார்.