சிலரை அறிமுகப்படுத்தும் போது அவரை என்ன சொல்லி அறிமுகப்படுத்துவது என்ற குழப்பம் வரும். அந்த அளவுக்கு பல துறைகளில் தங்கள் திறமையைக் காட்டிலும் அனைத்திலும் சாதித்திருப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் ஜேம்ஸ் வசந்தன். மெல்லிசைக் குழு நடத்துனராக, இசைப் பயிற்சியாளராக, தமிழ் ஆர்வலராக, நிகழ்த்தித் தொகுப்பாளராக, இசையமைப்பாளராக, பாடல் ஆசிரியாக, இயக்குனராக பல முகங்கள் கொண்டவர் ஜேம்ஸ் வசந்தன்.
இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்ற கனவோடு சென்னை வந்த ஜேம்ஸ் வசந்தன் முதலில் இசை நிகழ்ச்சி தொகுப்பாளராக சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அதன் பின்னர் சன் தொலைக்காட்சியில் டாப் 10 மூவிஸ் என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

#image_title
அதன் பின்னர் அவர் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அவரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியது, அவரிடம் பள்ளி காலத்தில் இசைப் பயின்ற மாணவரான சசிகுமார்தான். சுப்ரமண்யபுரம் படத்தில் தன்னுடைய வித்தியாசமான இசையால் முத்திரைப் பதித்த ஜேம்ஸ் வசந்தன் பெரிய இசையமைப்பாளராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அதன் பிறகு பெரியளவில் படங்களுக்கு இசையமைப்பதில்லை. இந்நிலையில் சமீபகாலமாக அவர் இசையமைப்பாளர் இளையராஜாவைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இது குறித்து பேசியுள்ள சசிகுமார் “எனக்கு ஜேம்ஸ் வசந்தன் சாருக்கும் இடையே அடிக்கடி சண்டை வரும். அவர் இளையராஜாவை விமர்சிப்பது எனக்குப் பிடிக்காது. இளையராஜா ஒரு ஜீனியஸ். அவரைப் பற்றி விமர்சனம் செய்யக் கூடாது என சொல்வேன். அவரைக் கேள்வி கேட்பதோ எதுவும் கூடாது என்று சொல்வேன். ஆனால் அவர் அதை ஏற்க முடியாது என்பார். எங்களுக்குள் இன்னமும் அந்த வாக்குவாதம் நீடித்து வருகிறது” எனக் கூறியுள்ளார்.