தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கருணாஸ். இவர் நடிகர் மட்டுமல்ல .ஒரு இசையமைப்பாளரும் கூட. அது மட்டும் இல்லாமல் இவர் தமிழக அரசியலிலும் களமிறங்கி கலக்கியவர்.
சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘நந்தா’ படத்தில் ‘லொடுக்கு பாண்டி’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் தான் கருணாஸ் சினிமா உலகில் அறிமுகமானார். இத்திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பின்னர் விஜய், அஜித், தனுஷ் என பல முன்னணி நடிகர்களோடு நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரானார். இதைத் தொடர்ந்து வில்லன், புதிய கீதை ,திருமலை, குத்து, பிதாமகன், திருடா திருடி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.
மேலும் திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, சாந்த மாமா போன்ற திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்பொழுது இவர் பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இப்போது அவரின் வாரிசான கென் கருணாஸும் நடிகராக தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார்.

#image_title
வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படத்தின் மூலம் கென் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் அவர் ஏற்று நடித்த சிதம்பரம் கதாபாத்திரத்தை வெகு சிறப்பாக நடித்தார் என்று பாராட்டுகளைப் பெற்றார். கென், நடிகரானது குறித்து பேசியுள்ள கருணாஸ் “என் மகன் என்பதால் மட்டுமே கென் நடிகனாகிவிடவில்லை. எல்லோரும் கென், கருணாஸ் மகன் என்பதால் எளிதாக அசுரன் படத்தில் நடித்துவிட்டான் என நினைப்பர்கள்.
ஆனால் அந்த படத்துக்காக மூனு மாசம் காலில் செருப்ப்புப் போடாமல் இருந்தான். 15 நாளில் 7 கிலோ எடை குறைத்தான். பல கஷ்டங்களைப் பட்டுதான் அவனும் சினிமாவுக்குள் வந்தான். நீச்சல் பயிற்சிகள் செய்ததால் அவனுக்கு முகத்தில் கட்டிகள் எல்லாம் வந்து கஷ்டப்பட்டான். இதல்லாம் யாருக்கும் தெரியாது.” எனக் கூறியுள்ளார்.
