உளுந்தூர்பேட்டை தேர்தல் களத்தில் அஇபுதமமுக வேட்பாளர் குமார் திடீரென திமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவின் நம்பிக்கைக்குரிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, கடந்த இரண்டு நாட்களாக ‘தென்னந்தோப்பு’ சின்னத்திற்காகத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்த குமார், யாரும் எதிர்பாராத விதமாகத் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார்.
திமுக அமைச்சர் எ.வ. வேலு முன்னிலையில் அக்கட்சியில் இணைந்த அவர், தான் போட்டியிடவிருந்த அதே தொகுதியின் திமுக வேட்பாளர் வசந்த வேலுவுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் இறங்கியிருப்பது அஇபுதமமுக தலைமைக்கு பலத்த அதிர்ச்சியைத் தந்துள்ளதோடு, தொகுதியின் தேர்தல் கணக்குகளையும் மாற்றியமைத்துள்ளது.
