தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜகவின் தேர்தல் வியூகங்களை வகுக்கவும் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யவும் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்துள்ளார். இதற்காக கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனது பணிகளை பாதியில் முடித்துக்கொண்டு அவசரமாக சென்னை திரும்பியுள்ளார்.
மேலும் சென்னையில் தங்கியுள்ள பிரதமர், இன்று நடைபெறும் பாஜக மத்திய கோர் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்று, கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு மற்றும் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள் குறித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளார்.
இது குறிப்பாக, சென்னையில் போட்டியிட உள்ள 16 வேட்பாளர்களை பிரதமர் நேரில் சந்தித்து வாழ்த்து கூற உள்ளதாகத் தெரிகிறது. வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பிரதமரின் இந்த ‘கடைசி நேர ஆபரேஷன்’ கட்சி நிர்வாகிகளிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தேர்தலில் போட்டியிடாத அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், பிரதமருடனான இந்த சந்திப்பு தமிழக அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
