சென்னை போயஸ் கார்டனில் உள்ள VK சசிகலா வீட்டில் நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அத்துமீறி நுழைந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் வீட்டில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக விஜய் வீட்டில் மொட்டை மாடியில் மர்ம நபர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரை விசாரித்ததில் நான்கு ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட சிகிச்சையில் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது.
