“நாளை வரும் நற்செய்தி” சசிகலாவின் அதிரடி அறிவிப்பால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு…!!

By Soundarya on மாசி 23, 2026

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா இன்று (பிப். 23) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 2026 தேர்தலுக்கான முக்கிய வியூகங்கள் குறித்துத் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும், “நாளை (பிப். 24) நடைபெறும் கூட்டத்தில் ஒரு நல்ல தகவலைச் சொல்கிறேன், முக்கிய முடிவு எடுக்கப்படும்” என்றும் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

நாளை பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அல்லது பசும்பொன்னில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் சசிகலா தனது புதிய அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. அதிமுகவில் தனக்கான இடம் மறுக்கப்பட்டுள்ள நிலையில், தனிக்கட்சி தொடங்கி 2026 தேர்தலில் கணிசமான தொகுதிகளில் போட்டியிட அவர் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு அதிமுக மற்றும் தமிழக அரசியலில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.