மக்களை ஏமாற்றி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என திமுக நினைப்பதாக சசிகலா விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் விலைவாசி, வீட்டு வரி, சொத்து வரி என அனைத்தும் உயர்ந்துவிட்டதாகச் சாடிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் தமிழகப் பொருளாதாரம் அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் தீயசக்தி ஆட்சி வேண்டுமா அல்லது துரோக ஆட்சி வேண்டுமா அல்லது தியாகத்தின் ஆட்சி வேண்டுமா என்பதை மக்கள் உணர்ந்து வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். திமுக அரசை ‘தீயசக்தி’ என விமர்சித்த அவர், தேர்தல் நேரத்தில் மக்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
