தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சசிகலாவை இணைப்பது குறித்து இன்று பாஜக மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, ஓ. பன்னீர்செல்வம் டெல்லிக்குச் சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசியிருந்தார். அதிமுகவின் பழைய பெருமையை மீட்டெடுக்க வேண்டும் என்று அமித் ஷாவிடம் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, டிசம்பர் 15 அன்று நடைபெறவிருந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தை அவர் ஒத்திவைத்தார்.
பாஜக தரப்பு, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கூட்டணியில் கொண்டு வர முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதேபோல், டிடிவி தினகரன் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் பாஜக அணுகி வருவதாக சொல்லப்டுகிறது. இந்த இணைப்பு பேச்சுவார்த்தைகள் அனைத்தும், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தும் பாஜகவின் திட்டத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…
ஹைதராபாத்தின் மலாக்பேட் பகுதியில் உள்ள அக்பர் பாஹ் இடத்தில் பட்டப்பகலில் பரபரப்பான ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அங்கே நிறுத்தப்பட்டிருந்த…
கொடூரமாகக் கடத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் இருண்ட உலகிற்குள் முடக்கப்பட்ட ஒரு சிறுமி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் துணிச்சலாகத் தப்பித்துத் தன்…
பொதுவெளியில் பெற்றோர்களுக்கிடையே நிகழும் வன்முறைச் சம்பவங்கள், அங்கிருக்கும் குழந்தைகளை வெறும் பார்வையாளர்களாக மட்டும் வைப்பதில்லை; மாறாக, அவர்களின் மன உலகைப்…
ஒரு நாள், கடுமையான பசியால் வாடிய பிச்சைக்காரன் ஒருவன், மிகுந்த சிரமப்பட்டு தனக்காகச் சேகரித்த சிறிதளவு உணவை வைத்திருந்தான். அப்போது,…
தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய்…