திடீர் டுவிஸ்ட்..! NDA கூட்டணியில் இணையும் சசிகலா..? தமிழக அரசியலில் பரபரப்பு..!!

By Soundarya on மார்கழி 13, 2025

Spread the love

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சசிகலாவை இணைப்பது குறித்து இன்று  பாஜக மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, ஓ. பன்னீர்செல்வம்  டெல்லிக்குச் சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசியிருந்தார். அதிமுகவின் பழைய பெருமையை மீட்டெடுக்க வேண்டும் என்று அமித் ஷாவிடம் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, டிசம்பர் 15 அன்று நடைபெறவிருந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தை அவர் ஒத்திவைத்தார்.

பாஜக தரப்பு, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கூட்டணியில் கொண்டு வர முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதேபோல், டிடிவி தினகரன் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும்  பாஜக அணுகி வருவதாக சொல்லப்டுகிறது. இந்த இணைப்பு பேச்சுவார்த்தைகள் அனைத்தும், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தும் பாஜகவின் திட்டத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது.