அதிமுகவுக்கு அடுத்த ஷாக்…. 6 எம்.எல்.ஏக்கள் அவுட்… சசிகலா கொடுத்த ரகசிய என்ட்ரி… இபிஎஸ்-க்கு வந்த அடுத்த ஆபத்து….!

By Nanthini on ஆடி 11, 2026

Spread the love

அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அரசியல் திருப்பங்கள், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. கடந்த தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, கட்சியின் 6 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அக்கட்சிக்கு பலத்த அடியாக அமைந்தது. இந்தச் சூழலில், எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீதான அதிருப்தியால் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தங்களின் அரசியல் எதிர்காலம் குறித்து குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். பலர் கட்சி தாவும் எண்ணத்திலும், சிலர் அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற குரலையும் எழுப்பி வருகின்றனர்.

இந்த இக்கட்டான சூழ்நிலையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் சசிகலா, அதிமுகவில் மீண்டும் ‘என்ட்ரி’ கொடுப்பதற்கான காய்களைத் தீவிரமாக நகர்த்தி வருகிறார். மன்னார்குடி வட்டாரங்களில் இருந்து கசியும் தகவல்களின்படி, எடப்பாடி பழனிசாமியின் தலைமையால் அதிமுக அதலபாதாளத்திற்குச் சென்றுவிடும் என்று சசிகலா எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், விரக்தியில் இருக்கும் சில முக்கிய முன்னாள் அமைச்சர்களை சசிகலா தரப்பு ரகசியமாகத் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

   

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு பல அணிகளாகச் சிதறிப் போன அதிமுக, எடப்பாடி பழனிசாமியின் ஒற்றைத் தலைமையின் கீழ் பயணித்தாலும், தொடர் தேர்தல் தோல்விகளால் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் போன்றவர்களே கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், சசிகலா இதில் தலையிட்டு நிர்வாகிகளை ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ளார். தனக்கு எந்தவொரு அரசுப் பதவியும் தேவையில்லை என்றும், ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் சசிகலா தூது அனுப்பி வருகிறாராம்.

   

சசிகலாவின் இந்த அதிரடி ஆலோசனைகளும், முன்னாள் அமைச்சர்களின் ரகசியத் தொடர்புகளும் எடப்பாடி பழனிசாமியைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. சசிகலா தரப்போடு எந்தவொரு அதிமுக நிர்வாகியும் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அவர் தரப்பிலிருந்து கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. சசிகலாவின் இந்த மறுபிரவேச முயற்சி வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஒன்றிணையுமா அல்லது கட்சி மேலும் சிதறுமா என்பது இனிவரும் நாட்களில்தான் தெரியவரும்.