ஒரு நாய்க்குட்டிக்கு பிஸ்கட் போட்டால் கூட… உதயநிதி சொல்வதில் என்ன தப்பு இருக்கு..? EPS-ஐ விளாசிய சசிகலா..!!

By Soundarya on சித்திரை 11, 2026

Spread the love

ராஜபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய சசிகலா, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாகச் சாடினார். திமுகவின் உதயநிதி ஸ்டாலின் தனது பிரச்சாரங்களில், ஈபிஎஸ் சசிகலாவின் காலில் விழுந்து ஆசி பெறும் பழைய புகைப்படத்தைப் பயன்படுத்துவதைத் தொடர்ச்சியாக விமர்சித்து வந்தார். இதற்குப் பதிலளித்த சசிகலா, “அந்தப் புகைப்படத்தில் இருப்பது உண்மைதானே? நடந்த ஒரு விஷயத்தை உதயநிதி சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பி, எடப்பாடி பழனிசாமியின் எதிர்ப்பைக் கிண்டல் செய்தார்.

மேலும், நன்றியுணர்வு குறித்துப் பேசுகையில் எடப்பாடி பழனிசாமியை ஒரு விலங்குடன் ஒப்பிட்டுப் பேசி அதிர வைத்தார். “ஒரு நாய்க்குட்டிக்கு பிஸ்கட் போட்டால் கூட அது நன்றியுடன் இருக்கும், ஆனால் அவர் தன்னைத் திருத்திக்கொண்டு நன்றியுணர்வுடன் இல்லை” எனத் தனது அதிருப்தியை வெளிப்படையாகப் பதிவு செய்தார். அதிமுக அரசியலில் நிலவும் இந்தப் பழைய புகைப்பட மோதல் மற்றும் சசிகலாவின் இந்த “நாய்க்குட்டி” விமர்சனம் தற்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது.