லக்னோ உயர்நீதிமன்ற வளாகத்தில் ஐந்தாவது மாடி கூரையின் மேல் ஏறி, தனது குழந்தையுடன் குதிக்கப் போவதாக மிரட்டல் விடுத்த பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த பதற்றமான சூழலில், அங்கிருந்த வழக்கறிஞர்களும் பொதுமக்களும் கடும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
மேலும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அந்தப் பெண்ணை கீழே இறக்க மீட்புக் குழுவினர் எவ்வளவோ முயன்றும், அவர் பிடிவாதமாக இருந்ததால் நிலைமை மிகவும் மோசமடைந்தது. இந்த இக்கட்டான தருணத்தில், அங்கிருந்த காவல் ஆய்வாளர் பாண்டே ஜி மிகவும் சாமர்த்தியமாகவும் மனிதாபிமானத்துடனும் செயல்பட்டார்.
यूपी लखनऊ हाईकोर्ट परिसर में एक महिला अपने बच्चे के साथ पांचवीं मंजिल की छत पर चढ़कर कूदने की धमकी देने लगी। एक घंटे तक चले रेस्क्यू ऑपरेशन के बाद वहां के पुलिस इंचार्ज पांडेय जी की बुद्धिमानी से महिला को बचाया गया। pic.twitter.com/GpPmbJSKYS
— Voice Of Brahmins (@VoiceOfBrahmins) April 11, 2026
“>
இதனால் தனது சாதுரியமான பேச்சால் அந்தப் பெண்ணின் கவனத்தைத் திசைதிருப்பிய அவர், ஒரு கட்டத்தில் மிக லாவகமாகப் பெண்ணையும் குழந்தையையும் பத்திரமாக மீட்டெடுத்தார். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பாண்டே ஜியின் சமயோசித புத்தியால் ஒரு பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. அவரது இந்த தீரமிக்க செயலை அங்கிருந்த அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
