தப்பு கணக்கு போடாதீங்க..! நான் ஒருத்தி இருக்கேன்னு திமுகவுக்கு மறந்திடுச்சா…? சசிகலா அதிரடி…!!

By Soundarya on தை 18, 2026

Spread the love
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சிக் காலங்களே உண்மையான மக்களாட்சியாகத் திகழ்ந்தன என்று வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார். தற்போதைய திமுக ஆட்சியில் மக்களாட்சி என்பது வெறும் பேச்சளவில் மட்டுமே இருப்பதாகவும், மக்கள் நலனை விட விளம்பரத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

திமுகவினர் தங்களுக்குப் போட்டியாக யாரும் இல்லை என்றும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்றும் தப்புக் கணக்கு போடுவதாக சசிகலா சுட்டிக்காட்டியுள்ளார். தான் அரசியலில் களமிறங்கி இருப்பதையே அவர்கள் மறந்துவிட்டதாகக் கூறிய அவர், விரைவில் அரசியல் களத்தில் உண்மை நிலவரத்தை அனைவரும் காண்பார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார். சசிகலாவின் இந்த அதிரடிப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.