தமிழ் சின்னத்திரையில் எப்போதுமே பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கும். குறிப்பாக பாடல்களை மையப்படுத்தி சூப்பர் சிங்கர் மற்றும் சரிகமப நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதனை ரசிக்க மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. சமீபத்தில் வித்தியாசமான கான்செப்ட் உடன் சூப்பர் சிங்கர் கடந்த வாரம் தொடங்கப்பட்டது. மக்களுக்கு இந்த நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மற்றொரு பக்கம் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப தற்போது ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் ஜீ தமிழின் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர் ஒருவர் பாடி கொண்டிருக்கும்போதே அவருடைய வீட்டில் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வாரம் சரிகமப நிகழ்ச்சியில் Dedication Round நடைபெற்றது. இதில் போட்டியாளர் அருண் தன்னுடைய அம்மாவிற்காக பாடல் ஒன்றை பாடி சமர்ப்பித்தார். அவர் பாடி முடித்த பிறகு தொகுப்பாளினை அர்ச்சனா அனைவருக்கும் ஒரு அதிர்ச்சி தரும் செய்தியை பகிர்ந்து கொண்டார். அதாவது அருண் பாடி கொண்டிருக்கும்போதே அவருடைய பாட்டி இறந்துவிட்டாராம்.
இந்த செய்தியை அருணிடம் சொல்ல வேண்டாம் என்று அவருடைய தாய் மறைத்துள்ளார். பாடி முடித்த பிறகு அவரிடம் தொகுப்பாளினி இந்த விஷயம் குறித்து கூற அனைவரும் சோகத்தில் மூழ்கி விட்டன. பிறகு அனைவரும் மௌன அஞ்சலி செலுத்திய நிலையில் அது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பலரையும் கலங்க வைத்துள்ளது
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…