சர்தார் 2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து.. சண்டை பயிற்சியாளர் உயிரிழப்பு.. சோகத்தில் படக்குழுவினர்..!

By Mahalakshmi on ஜூலை 17, 2024

Spread the love

சர்தார் 2 படப்பிடிப்பின் போது 20 அடி உயரத்தில் இருந்து விழுந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலை உயிரிழந்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான திரைப்படம் சர்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருந்தது. வாட்டர் மாஃபியாக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் கார்த்திக் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.

   

   

சர்தார் 2 திரைப்படத்தின் பூஜை கடந்த வாரம் தொடங்கிய நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. சமீபத்தில் தான் எஸ் ஜே சூர்யா என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இன்று சென்னை சாலிகிராமம் அருகே இருக்கும் பிரசாத் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

 

இந்நிலையில் அப்படத்தின் சண்டை பயிற்சியாளர் ஏழுமலை எந்தவித உபகரணங்களும் இல்லாமல் சண்டை பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். 20 அடி உயரத்தில் இருந்து அவர் தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியானது. விபத்தை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 20 அடி உயரத்தில் இருந்து அவர் கீழே விழுந்ததால் மார்பு பகுதியில் காயம் அடைந்து ரத்தக்கசிவு ஏற்பட்டதால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் படக்குழுவின் இடையே மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.