இந்தியன் 2 படத்துக்கு வந்த புது சிக்கல்.. திடீரென்று போராட்டத்தை தொடங்கிய அணியினர்.. இது எங்க இருந்து கிளம்புச்சு..!

By Mahalakshmi on ஜூலை 17, 2024

Spread the love

இந்தியன் 2 திரைப்படத்தை எதிர்த்து இ சேவை மையத்தை சேர்ந்த ஊழியர்கள் பலரும் போராட்டம் செய்து வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்பட்டு வரும் சங்கர் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் இந்தியன் 2. இந்த திரைப்படத்தில் கமலஹாசன் நடித்திருந்தார். மேலும் சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள்.

   

   

கடந்த ஜூலை 12-ம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியது. திரைப்படம் வெளியானது முதலே தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. மேலும் இந்த திரைப்படத்தின் நேரம் அதிகமாக இருந்த காரணத்தால் மக்களை ஈர்க்கவில்லை எனவும் அதிலும் படத்தில் ஊழல் லஞ்சம் போன்றவற்றை பற்றி அதிக அளவில் பேசப்பட்டு இருப்பதால் 2கே கிட்ஸ்கள் இதனை கிரிஞ் என்று கூறி வருகிறார்கள்.

 

இதனால் தொடர்ந்து படத்தின் விமர்சனம் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. வசூல் ரீதியாகவும் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் கமலஹாசன் இந்தியன் தாத்தாவாக நடித்து மிரட்டி இருக்கிறார் என்று பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். படம் எடுக்க தொடங்கிய நாள் முதலில் ஏற்பட்ட பிரச்சனை தற்போது வரை முடிந்த பாடு இல்லை.

படம் வெளியாகும் வரை பல சர்ச்சைகளை சந்தித்த இந்தியன் 2 திரைப்படம் வெளியானதுக்கு பிறகும் தற்போது புதிய சிக்கலை சந்தித்துள்ளது. அதாவது படத்தில் இ சேவை மைய ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது போன்ற காட்சிகள் படத்தில் இடம்பெற்று இருந்தது. இதை பார்த்த இ சேவை மையம் ஊழியர்கள் திடீரென்று போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.

அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது “இந்தியன் 2 திரைப்படத்தில் தங்களை தவறாக சித்தரிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 300 ரூபாய் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று இ சேவை மையம் ஊழியர்களை பற்றி தவறாக எப்படி காட்டலாம். எங்களை இழிவாகவும் ஊழல்வாதிகள் என்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது மிக தவறானது” என்று அந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.