இயக்குனர் பாலா இயக்கத்தின் நீண்ட வருடங்கள் பிறகு சூர்யாவும் பாலாவும் இணைந்து பண்ணப் போகும் படம் தான் வணங்கான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார்கள். சூர்யா இப்படத்தில் நடிக்கிறார் என்று வணங்கான் பெயரில் சூர்யாவின் கெட்டப்பை அமைத்து அதற்கு ஏற்ற லுக்கினை செட் செய்த படத்தின் டைட்டிலையும் பர்ஸ்ட் லுக்கையும் ஷூட்டிங் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டு இப்படத்திற்கு பழக்கமோஷனை ஆரம்பித்து விட்டார்கள், ஆனால் சூரியாவிற்கும் பாலாவுக்கும் சில கருத்து வேறுபாட்டால் சர்ச்சையாகி இப்படத்தை விட்டு சூர்யா வெளியேறி விட்டார்.
அடுத்ததாக இப்படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் அவர்கள் நடிக்க தொடங்கினார். மீண்டும் இப்ப படப்பிடிப்பு துவங்கி ஃபர்ஸ்ட் லுக் க் போஸ்டர் காக அருண் விஜய் இப்படத்தில் ரெடி பண்ணி முதலிலிருந்து பஸ்ட் லுக்கை வெளியிட்டு சில புகைப்படங்களை படத்தில் இருந்து வெளியிட்டு இருந்தார்கள். தற்போது இப்படத்தில் இத்தனை பிரச்சனை வந்த பின்னும் மீண்டும் ஒரு பெரிய பூதாகரமான ஒரு பிரச்சனை எழும்பியுள்ளது. பாலா படத்தின் டைட்டிலை இதற்கு முன்னதாகவே கேமரா மேன் ஆக இருந்த சரவணன் அவர்கள் இயக்கும் புது படத்திற்கு வணங்கான் என்று டைட்டில் வைத்து டீசர் ஒன்று தயாரித்து அதை சென்சார் போர்டு அனுப்பி இந்த டைட்டிலை பதிவு செய்துவிட்டாராம்.
அதனால் இனிமேல் பாலாவிற்கு வணங்கான் என்ற டைட்டிலை பயன்படுத்த முடியாது, சரவணன் அவர்கள் இதற்கு முன்னால் சூர்யா அவர்கள் நடிக்கும் பொழுதே இந்த டைட்டிலை நான் என் படத்தில் உபயோகப்படுத்தி இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் 2D ப்ரொடக்ஷனும் சூர்யாவும் சரி பாலாவும் இதை கண்டுகொள்ளவில்லையாம். இவர் முதலிலே நடிகர் சங்கதில் பதிவு செய்துவிட்டாராம், பாலா அவர்கள் வேறொரு சங்கத்தில் பதிவு செய்திருக்கிறார், அதனால் இந்த சர்ச்சை மிகப்பெரியதாக வளர்ந்து வருகிறது, சரவணன் அவர்கள் மத்திய சென்சார் போர்டில் பதிவு செய்ததால் இந்த டைட்டிலை பாலாவால் இனி உபயோகப்படுத்த முடியாது.
பாலா படத்திற்கு பெயர் மாற்றம் செய்வதே ஒரு நல்ல விஷயம், ஆனால் இனிமேல் மறுபடியும் புது டைட்டில் வெளியிட்டு அருண் விஜய்க்கு பர்ஸ்ட் லுக் தயார் செய்து மறுபடியும் வெளியிட்டு முதலிலிருந்து ப்ரொமோஷனை தொடங்க வேண்டும். இது குழுவிற்கு பெரிய சிக்கலாக அமைந்துள்ளது. இதற்கு காத்திருந்துதான் பார்க்க வேண்டும். அது மட்டும் இன்றி புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அருண் விஜய் அவர்களுக்கு அம்மாவாக சரத்குமார் அவர்களின் முதல் மனைவியும் வரலட்சுமி அவர்களின் அம்மாவான “சாயா” அவர்கள் நடிக்க உள்ளார்களாம்.
