போதும் வெயிட் பண்ணது.. 36 வயதில் திருமணத்துக்கு ரெடியான நடிகை டாப்ஸி.. இவர் தான் மாப்பிள்ளையா..?

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை டாப்ஸி. இவர் தமிழ் திரையுலகில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை டாப்ஸி. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் முதன் முதலில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

   

அதன் பிறகு தமிழில் வந்தான் வென்றான் மற்றும் காஞ்சனா உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். இவரின் நடிப்பாலும், அழகாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே  உள்ளது.  தற்போது தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் பிசியான நடிகையாக நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல தென்னிந்திய நடிகையான டாப்ஸி தன்னுடைய காதலருடன் திருமணத்திற்கு தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது.

 

சமீபத்தில் தான் நடிகை டாப்ஸி பண்ணு, தனது நீண்டகால காதலரும் பேட்மிண்டன் வீரருமான, மத்தியாஸ் போவை காதலித்து வருவதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து, இவர்களின் திருமண செய்தி தற்போது திரையுலகின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.  இவரின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் சீக்கிய மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெறவுள்ளதாக உள்ளதாகவும், இவர்களின் திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாகவும், பாலிவுட் மற்றும் தென்னிந்திய பிரபலங்கள் என யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை என்றும்  கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர்களது திருமணம் மார்ச் மாத இறுதியில் நடைபெற உள்ளதாக NTV செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் டாப்ஸி தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. சமீபத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் – ஜாக்கி பக்நானி திருமணம் நடந்து முடிந்த நிலையில், அவரை தொடர்ந்து, டாப்ஸியும் தன்னுடைய திருமணத்திற்கு தயாராகியுள்ளார் என்ற தகவலை அறிந்த ரசிகர்களும், திரைபிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.