அம்மாவைப் போல அப்படியே இருக்கும் சரண்யா மோகன் மகள்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

By Mahalakshmi on ஜூலை 27, 2024

Spread the love

நடிகை சரண்யா மோகனின் மகள் சிறுவயதில் பார்ப்பதற்கு அப்படியே அவரைப்போல இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

கேரளாவில் பிறந்து வளர்ந்த மலையாள நடிகை சரண்யா மோகன். பல படங்களில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்து அறிமுகமான இவர் விஜய் நடித்த காதலுக்கு மரியாதை படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர் தமிழில் காதலுக்கு மரியாதை, ஒருநாள் ஒரு கனவு போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கின்றார்.

   

   

அதன்பிறகு வளர்ந்து வேலாயுதம் திரைப்படத்தின் விஜய்க்கு தங்கையாகவும் நடித்திருந்தார். மேலும் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார். தமிழ் சினிமாவிலும் சரி, மலையாளத்திலும் சரி இவருக்கு ஹீரோயினாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

 

இருப்பினும் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான அரவிந்த் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்களுக்கு ஆனந்த பத்மநாபன் என்ற மகனும் ஒரு மகளும் இருக்கின்றார். இவர் மகள் பார்ப்பதற்கு அப்படியே அவரது அம்மா சரண்யா மோகன் போலவே இருக்கின்றார்.

தற்போது சற்று வளர்ந்திருக்கும் அவர் பள்ளி மாறுவேடப் போட்டியில் பங்கேற்று இருக்கின்றார். இந்த புகைப்படத்தை சரண்யா மோகன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இதை பார்த்த பலரும் அப்படியே உங்களை போலவே உங்கள் மகள் இருக்கிறார் என்று கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள்.