இந்த சிறு வயது புகைப்படத்தில் இருக்கும் விஜய் பட நடிகை யாருன்னு தெரியுதா..? எங்க கண்டுபிடிங்க பார்ப்போம்..!

By Mahalakshmi on ஆடி 27, 2024

Spread the love

பிரபல நடிகை பூஜா ஹேக்டேவின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு படங்களில் நடித்து அறிமுகமான இவர் மிஸ் யூனிவர்ஸ் இந்தியா 2010 போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தவர். தமிழில் வெளியான முகமூடி என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

   

   

இந்த திரைப்படம் அவருக்கு அந்த அளவுக்கு கை கொடுக்கவில்லை. இதையடுத்து நாகச்சைய்தன்யாவுடன் இணைந்து தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கில் இவர் நடித்த திரைப்படங்கள் கொஞ்சம் வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து வந்தார்.

 

மேலும் கிருத்திக் ரோஷன் உடன் இணைந்து ஹிந்தியில் மொகஞ்சதாரோ என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் அதிக கவனம் செலுத்தி வந்த இவர் தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜயுடன் இணைந்து வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு அந்த அளவுக்கு வரவேற்பை கொடுக்கவில்லை என்றாலும் இவரின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இதையடுத்து பான் இந்தியா நடிகையாக வளம் வந்த இவர் தொடர்ந்து சினிமாவில் ஏகப்பட்ட திரைப்படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகின்றார். தற்போது டாப் நடிகையாக இருந்து வரும் இவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் அந்த நடிகையா? இது என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.