தனியார் மயம் கிடையாது..! டெண்டர் ரத்து… தூய்மைப் பணியாளர்களின் வயிற்றில் பால் வார்த்த தமிழக அரசின் மாஸ் முடிவு..!!

By Soundarya on ஆனி 26, 2026

Spread the love

தமிழ்நாட்டில் உள்ள 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளைத் தனியார் மயமாக்கும் நோக்கில், அதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்யக் கோரப்பட்டிருந்த டெண்டரைத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது. தூய்மைப் பணிகளைத் தனியார் வசமாக்கக் கூடாது என்றும், இந்தத் திட்டத்தைக் கைவிட்டு அரசு தங்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்றும் தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையிலும், தமிழக அரசின் இந்த முடிவுக்கு தார்மீக ரீதியாக எதிர்ப்பு கிளம்பிய நிலையிலும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணிக் கட்சிகளே அரசின் இந்தத் தனியார் மயமாக்கல் முடிவுக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தன. கூட்டணிக் கட்சிகள் மற்றும் தொழிலாளர்களின் தொடர் அழுத்தத்தைத் தொடர்ந்து, தூய்மைப் பணிகளை அரசு கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து நீட்டிக்கச் செய்யும் வகையில் இந்த டெண்டரைத் திரும்பப் பெறுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.