பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலினை நேரடியாக சந்திக்க தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்ல இருந்த தூய்மை பணியாளர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஏற்கனவே தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்ட போது சாலை மறியலில் ஈடுபட்டதால் பதற்றம் உருவானது. தற்போது மீண்டும் பதற்றமான சூழல் நிலவுவதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளன.
