காலையிலேயே ஷாக்… இரவோடு இரவாக கைது… தமிழகத்தில் அடுத்த பரபரப்பு…!

By Nanthini on ஆவணி 19, 2025

Spread the love

மதுரையில் தூய்மை பணியாளர்களை போலீசார் நேற்று இரவோடு இரவாக குண்டு கட்டாக கைது செய்தது தமிழகத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊதிய உயர்வு மற்றும் தனியார்மயமாக்களுக்கு எதிர்ப்பு உள்ளிட்டவைகளை முன்வைத்து சென்னையை போல் மதுரையிலும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

அரசு இரண்டு கட்டமாக பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200க்கும் மேற்பட்டோர் இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட நிலையில் இது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.