அதிமுக கூட்டணி தலைவருக்கு அதிர்ச்சி… கட்சி அங்கீகாரம் ரத்து… இபிஎஸ் தலையில் பேரிடி…!

By Nanthini on ஆவணி 19, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக எந்த முறை அதிமுக ஆட்சியை தமிழகத்தில் பிடித்து விட வேண்டும் என்ற நிலைப்பாடோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பதால் முக்கிய நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கும் காரணத்தால் கட்சித்தாவி வருகின்றனர். இதனால் இபிஎஸ்-க்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தாமரை சின்னம் ஓகே... ஆனா, 1+1: ஜான்பாண்டியன் | Tamizhaga Makkal Munnetra  Kazhagam alliance with bjp - hindutamil.in

   

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருக்கும் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்பட உள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக தமமுக எந்த தேர்தலிலும் தனித்துப் போட்டியிடவில்லை. 2021 ஆம் ஆண்டில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்திலும், 2024 ஆம் ஆண்டில் பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்திலும் ஜான் பாண்டியன் போட்டியிட்டார். இதனால் அந்த கட்சியை அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளது. ஒருவேளை இந்த கட்சி ரத்து செய்யப்பட்டால் இபிஎஸ்ஸுக்கு இது பெரும் பின்னடைவாக இருக்கும்.