“சும்மா விடமாட்டேன்.. 2-வது பிரதிவாதியாக அந்த நடிகை?”…. சங்கீதா எடுத்த அதிரடி முடிவு…. 12 பக்க மனுவில் இருக்கும் அந்த ‘ஷாக்’ தகவல்….!

By Nanthini on மாசி 28, 2026

Spread the love

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரது 27 ஆண்டுகால திருமண வாழ்க்கை தற்போது விவாகரத்தை நோக்கி நகர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 12 பக்க விவாகரத்து மனுவில், விஜய் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த மனு வரும் மார்ச் 20-ம் தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில், அதில் உள்ள தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளன.

சங்கீதாவின் விவாகரத்து மனுவில் முக்கிய காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது விஜய்க்கு ஒரு நடிகையுடன் இருப்பதாகக் கூறப்படும் திருமணத்தை மீறிய உறவுதான். கடந்த 2021-ம் ஆண்டே தனக்கு இது தெரியவந்ததாகவும், அதனைத் தட்டிக்கேட்டபோது விஜய் தன்னை வார்த்தைகளால் அவமானப்படுத்தியதாகவும் சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார். அந்த நடிகையின் பெயரைக் குறிப்பிடாமல், தேவைப்பட்டால் அவரை இரண்டாவது பிரதிவாதியாகச் சேர்க்கப்போவதாகவும் அவர் தனது மனுவில் எச்சரித்துள்ளார்.

   

மேலும், இந்த விவகாரம் தொடர்பாகக் கேள்வி எழுப்பியதால் தனக்கான வீட்டு உரிமைகளையும், பணப்புழக்கத்தையும் விஜய் தடுத்து நிறுத்தியதாக சங்கீதா வேதனை தெரிவித்துள்ளார். கணவன் – மனைவி இடையிலான தாம்பத்திய உறவிலிருந்து விஜய் விலகிச் சென்றதுடன், தன்னை மனரீதியாகப் பாதிக்கும் வகையில் கட்டுப்பாடுகளை விதித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகளின் படிப்பு மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே இத்தனை காலம் அமைதி காத்ததாகவும், இனி ஒன்றாக வாழ முடியாது என்ற சூழலில்தான் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

   

தொடர்ந்து சுமூகமான முறையில் பிரியத் தான் எடுத்த முயற்சிகளுக்கு விஜய் ஒத்துழைக்காததால், வேறு வழியின்றி நீதிமன்றத்தை நாடியுள்ளதாக சங்கீதா தெரிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் பிரவேசம் சூடுபிடித்துள்ள இந்த வேளையில், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கல் ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விஜய் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் ஏதும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.