இயக்குனர் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தில் காமெடி நடிகராக அறிமுகமானவர்தான் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. பாப் கட்டிங் செம்பட்டை முடியுடன் சராசரி உயரத்துக்கும் குறைவான உயரம் கொண்ட மனிதராக மாமு வேற மாதிரி ஆகிடும் என்று சவுண்டு விட்டபடி நடித்த இவர் முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்திலும் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படத்திலும் இவர் நடித்து அசத்து இருந்தார்.

தற்போது பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் இவ்வாறு சில மாதங்களுக்கு முன்பு சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சினிமாவில் காமெடி பீசாக பலரால் பார்த்து ரசிக்கப்படும் இவர் உண்மையில் மிகப் பெரிய கோடீஸ்வரர். தமிழக அரசு நடத்தக்கூடிய பொருட்காட்சிகளை விட அதிக பொருட்காட்சிகளை நடத்தி கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டுகிறார். பொருட்காட்சி ஒப்பந்ததாரரான இவருக்கு கீழ் 300-க்கும் மேற்பட்டோர் பணி செய்கின்றனர் என்றால் பலராலும் இதனை நம்ப முடியாது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பொருட்காட்சிகளை நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் ரெடின் கிங்ஸ்லி தனது மனைவியுடன் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்தார். அதில் சங்கீதா தாது கணவர் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், இவரை பேச்சுலர் லைஃபில் இருந்து திருமண வாழ்க்கைக்கோள் கொண்டு வர மிகவும் சிரமப்பட்டேன். கல்யாணம் முடிந்து சில நாட்களில் நாங்கள் இருவரும் ஒன்றாக ஒரு ஹோட்டலுக்கு சென்று இருந்தோம். அப்போது நான் உடன் இருப்பதை மறந்து விட்டு ஒரு காபி மட்டும் அவருக்கு ஆர்டர் செய்தார். பிறகுதான் நான் இருக்கும் ஞாபகமே அவருக்கு வந்தது.

இது தவிர இன்னும் ஒரு படி மேலே சென்று வீட்டை விட்டு வெளியேறும்போது நான் வீட்டில் இருப்பதை மறந்தே என்னை உள்ளே வைத்து பூட்டி விட்டு சென்று விட்டார். பிறகு சிறிது நேரம் கழித்து வந்தது தான் நான் இருப்பதை நினைத்து வீட்டை திறந்து விட்டார். அந்த அளவிற்கு முழுக்க முழுக்க இவர் அந்த பேச்சுலர் லைப்பில் மூழ்கிக் கிடந்தார். பிறகு ஒவ்வொன்றாக இவருக்கு சொல்லிக் கொடுத்து அந்த வாழ்க்கையில் இருந்து இவரை வெளியே கொண்டு வந்தேன். இருந்தாலும் எல்லா விஷயங்களையும் திருமண வாழ்க்கையை பொருத்தவரையில் நான் தான் எடுக்க வேண்டியுள்ளது என்று சங்கீதா கூறியுள்ளார்
