நடிகர்கள் கூட்டத்தில் ராதா ரவியை மேடையில் கையைப் பிடித்து இழுத்து சண்டை போட்ட கமல்.. என்ன காரணம் தெரியுமா..?

By Nanthini on புரட்டாதி 20, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 70களில் தொடங்கி 90கள் வரை மிரட்டலான வில்லனாக வலம் வந்தவர் தான் நடிகர் ராதாரவி. அவருடைய வில்லத்தனமான நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், சத்யராஜ் என பல நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது இவர் படங்களில் குணச்சித்திர வேதங்களிலும் நெகட்டிவ் கதாபாத்திரங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நடிகர் ராதாரவி சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது கமல் பற்றி ஒரு தகவலை பகிர்ந்து கொண்டார். அதில், அந்த காலகட்டத்தில் ரஜினிக்காக ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தோம்.

   

அப்போது மேடையில் பேசிய கமல், சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களே, புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களே என ஒவ்வொருவரின் பேருக்கு முன்பும் அவர்களின் அடையாளத்தை கூறி பேசிய அவர் ராதாரவி அவர்களே என என் பெயரை எதுவும் கூறாமல் அப்படியே பேசினார். சிறிது நேரம் கழித்து என்னை பேச அழைத்தார்கள். நானும் பேசத் தொடங்கியதும், சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களே, புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களே என கூறிக்கொண்டு இறுதியில் கமல் அவர்களே என முடித்து விட்டேன்.

   

 

சிறிது நேரம் கழித்து மேடையில் நடிகர்கள் ஒன்றாக நின்று கொண்டிருந்தபோது கமல் என் கையைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்றான். நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். வாடா போடா என்று கலகலப்பாக பேசிக் கொள்வோம். என்னை கையைப் பிடித்து இழுத்துச் சென்று என்னை கமல் என்று எப்படி நீ கூறலாம் என்று கேட்க நானும் என்னை ராதாரவி என்று நீ எப்படி கூறலாம் என்று கேட்டேன். அன்று இருவருக்கும் இடையே ஒரு கலகலப்பான வாக்குவாதம் நடந்தது என ராதாரவி கூறியுள்ளார்.