இனி அனைத்து மொபைல் போன்களிலும் “சஞ்சார் சாத்தி” செயலி கட்டாயம்… மத்திய தொலைத்தொடர்புத்துறை உத்தரவு…!!

By Soundarya on மார்கழி 2, 2025

Spread the love

அனைத்து மொபைல் போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலி இனி கட்டாயம் என ஒன்றிய தொலைத்தொடர்புத்துறை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த உத்தரவை போன்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் அடுத்த 90 நாட்களுக்குள் சைபர் பாதுகாப்பு செயலியான “சஞ்சார் சாத்தி: செயலி FreeInstall  செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும், அதை பயனர்கள் Disable செய்யாத வகையில் இருக்க வேண்டும் என்றும் செல்போன் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள பிரதான நிறுவனங்களிடம் அரசு தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் தொலைந்துபோன அல்லது திருடுபோன செல்போன்களை கண்டுப் பிடிக்கவும், ஐஎம்இஐ மோசடி, ஒருவர் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களையும் இந்த செயலி மூலம் பெறலாம்.