விவாகரத்துக்கு பிறகு தனக்கு ஆன்மீகம் தான் மிகப்பெரிய ஆதரவாக இருந்தது என்று சமந்தா தெரிவித்து இருக்கின்றார்.
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. தமிழில் மாஸ்கோவின் காவேரி என்ற திரைப்படத்தில் தனது திரை பயணத்தை தொடங்கிய இவருக்கு பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் தெலுங்கில் இவரின் திரைப்படங்கள் நல்ல வரவேற்பு கொடுத்ததை தொடர்ந்து தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் டாப் நடிகையாக வலம் வந்தார்.

இவர் தெலுங்கு நடிகர் நாகசைய்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு நான்கு ஆண்டுகளில் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். இவர்களின் விவாகரத்து மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. விவாகரத்திற்கு பிறகு மையோசிட்டிஸ் என்ற தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்ட இவர் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வருகின்றார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார். கடந்த மூன்று வருடங்களில் தன் வாழ்க்கையில் என்னென்னவெல்லாம் நடக்க கூடாது என்று எண்ணினேனோ அதெல்லாம் நடந்து முடிந்து விட்டது. வாழ்க்கையில் சில மாற்றங்களை நாம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். நம்பிக்கைதான் உங்களை முன்னோக்கி கொண்டு செல்லும் .
வாழ்க்கை உங்கள் மீது வீசும் அனைத்தையும் சமாளிக்க வேண்டும் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். இப்போது நான் மிக வலுவாக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் ஆன்மிகம் தான். விவாகரத்திற்கு பிறகு ஆன்மீகம் தான் எனக்கு மிகப்பெரிய புத்துணர்ச்சியாக அமைந்தது. எனது தனிப்பட்ட வளர்ச்சிக்கு ஆன்மீகம் பலமாக இருக்கின்றது.

என் வாழ்வில் அனைத்து விஷயங்களிலும் அதன் தாக்கம் இருக்கின்றது. இன்றைய உலகில் முன்பை விட ஆன்மீகம் அதிகம் தேவைப்படுகின்றது என்று அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கின்றார். மேலும் சமந்தா தனது நோயிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு வரும் நிலையில் தொடர்ந்து சினிமாவிலும் கவனம் செலுத்தி நடித்து வருகின்றார்.
