30 கார் வச்சிருந்தோம்… பெட்ரோல் பங்க் பக்கத்துல இல்லாததால் அந்த முடிவ எடுத்தோம்- AVM குகன் பகிர்ந்த ஆச்சர்யத் தகவல்

By vinoth on ஜூலை 17, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 40 களில் இருந்து 70 களின் இறுதிவரை தொடர்ச்சியாக படங்கள் எடுத்து இந்தியா முழுவதும் அவற்றை ரிலீஸ் செய்து வெற்றிகொடி நாட்டிய நிறுவனம் ஏவிஎம். அந்த நிறுவனத்தின் நிறுவனர் ஏ வி மெய்யப்ப செட்டியார் இறந்த போது சில ஆண்டுகள் அவர்கள் படம் தயாரிக்காமல் இருந்தனர்.

இந்நிலையில் ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமா தயாரிப்பில் இறங்கி செகண்ட் இன்னிங்ஸிலும் வெற்றி கண்டது. அப்போது ஏவிஎம் நிறுவனம் முரட்டுக்காளை மற்றும் சகலகலா வல்லவன் ஆகிய படங்கள் ஹிட்டானதை அடுத்து தொடர்ந்து படங்கள் தயாரித்தனர். அப்போது மாஸ் ஹீரோக்களுக்கான படங்கள் மட்டும் இல்லாமல், குடும்ப ரசிகர்களுக்கான குடும்பக் கதை கொண்ட படங்களையும் எடுத்தனர்.

   

ஏவிஎம் நிறுவனம் சிறிய பட்ஜெட்டில் படம் எடுத்தாலும் அதை பிரம்மாண்டமாக மக்கள் மத்தியில் விளம்பரப் படுத்தி சிறப்பாக மார்க்கெட்டிங் செய்யும் யுக்தியைக் கையாளும் . பல படங்களுக்கு அவர்களின் விளம்பரம் மிகச்சிறப்பாக அமைந்து மக்களை தியேட்டருக்குள் இழுத்துள்ளது.

   

இந்நிலையில் ஏவிஎம் நிறுவனர் ஏவி மெய்யப்ப செட்டியாரின் மகன்களில் ஒருவரான ஏவிஎம் குகன், சமீபத்தில் அளித்துள்ள ஒரு நேர்காணலில் ஏவிஎம் நிறுவனம் பற்றிய பல சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “ஏவிஎம் நிறுவனத்திடம் அப்போது 30 கார்கள் வரை இருந்தன. அதற்கென்று தனியாக டிரான்ஸ்போர்ட் பிரிவே இருந்தது. அந்த கார்களில்தான் நடிகர்களை அழைத்து வரும் திரும்ப கொண்டு சென்று விடுவதும் நடக்கும்.

 

கோடம்பாக்கம் ரயில்வே கேட்டைத் தாண்டிவிட்டால் இந்த பக்கம் எல்லாம் கிராமம்தான். அதனால் இங்கு பெட்ரோல் பங்க் எதுவும் இல்லை. பெட்ரோல் போடவேண்டுமென்றால் பாண்டிபஜாருக்குதான் செல்லவேண்டும். அதனால் எங்களுக்கு நேரமும் பெட்ரோலும் செலவானது. அதனால் என் தந்தையார் எஸ்ஸோ பெட்ரோல் பங்க் நிறுவனத்திடம் பேசி ஏவிஎம் ஸ்டுடியோவுக்குள்ளேயே ஒரு பெட்ரோல் பங்கை உருவாக்கினார். இந்தியாவிலேயே முதல் முதலாக ஒரு ஸ்டுடியோவுக்குள் பெட்ரோல் பங்க் வந்தது அதுதான் முதல் முறை. அதன் பின்னர்தான் விஜயா ஸ்டுடியோவுக்குள்ளும் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டது” எனக் கூறியுள்ளார்.