நடிகை சமந்தா – இயக்குனர் ராஜ் நெடிமூரு திருமணம் கடந்த டிசம்பர் 1ம் தேதி கோவையில் உள்ள ஈஷா மையத்தில் எளிமையாக நடந்தது. அவர்கள் இருவரும் இப்போது தேனிலவை கொண்டாட போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள லிஸ்பன் என்ற பகுதிக்கு சென்றுள்ளனர். ஆங்கில புத்தாண்டு தினத்தையும் அவர்கள் அங்கு தான் இப்போது சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தாங்கள் சென்ற சுற்றுலா தலங்கள் மற்றும் ஓட்டல்களில் உணவருந்தும் புகைப்படங்களை நடிகை சமந்தா தனது வலைதள பக்கத்தில் மகிழ்ச்சியாக வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் தேனிலவு கொண்டாடும் தம்பதிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் சமந்தா – ராஜ் நெடிமூரு இருவரும் இதற்கு முன்பு தி பேமிலி மேன் 2, சிட்டாடல் ஹனி பன்னி போன்ற வெப் தொடர்களில் ஒன்றாக இணைந்து பணி செய்துள்ளனர். இப்போது மீண்டும் இருவரும் இணைந்து ஒரு படத்தை தயாரித்து வருகின்றனர். போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள லிஸ்பன் பகுதியில் ஹனிமூன் கொண்டாட்டத்தில் சந்தோஷத்தில் திக்குமுக்காடி திணறி வரும் சமந்தாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
