இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கத்தில் உருவான படம் மனசங்கர வரபிரசாத் காரு. இந்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி நாயகனாகவும் நாயகியாக நயன்தாராவும் நடித்திருக்கிறார். இந்த படத்தில் பீம்ஸ் செசிரோலியோ இசையமைப்பில் உருவான மீசாலா பில்லா என்ற பாடல் கடந்த அக்டோபர் மாதம் யூடியூப் தளத்தில் வெளியானது.
இந்தப் பாடல் வெளியான 75 நாட்களில் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இந்த பாடலில் இளம் நடிகர்களைப் போல சிரஞ்சீவி இப்படி ஒரு நடனமாடி காதல் பாடலில் நடிப்பது குறித்து எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் அந்த விமர்சனங்களையும் தாண்டி இந்த பாடல் யூடியூப்பில் 100 மில்லியன் பார்வைகளை கடந்திருப்பது இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது வரும் சங்கராந்திக்கு இந்த படம் ரிலீஸ் ஆகிறது.
