சூட்கேஸுக்குள் அழுகிய உடல்.. 2வது புருஷனோடு ஜாலி வாழ்க்கை…. 5 வருஷம் கழித்து சிக்கிய ஸ்பா அழகி…. சேலத்தை நடுநடுங்க வைத்த சம்பவம்…!

Spread the love

சேலம் அஸ்தம்பட்டி குமாரசாமிப்பட்டி பகுதியில் ஸ்பா மற்றும் அழகு நிலையம் நடத்தி வந்த வங்கதேசத்தைச் சேர்ந்தவர் தேஜ்மண்டல். கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி, இவர் தனது வாடகை வீட்டில் கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் துணி திணிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் ஒரு பெரிய சூட்கேஸுக்குள் அடைக்கப்பட்டு அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது, அப்போதே சேலம் மாநகரையே பெரும் அதிர்ச்சியிலும் பீதியிலும் ஆழ்த்தியது.

இக்கொலையின் பின்னணியில் இருந்த திடுக்கிடும் பகீர் பின்னணி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தேஜ்மண்டலிடம் பணிபுரிந்த லப்லு, அவரது மனைவி நிஷி, ஷீலா மற்றும் ஓஷி ஆகிய வங்கதேசத்தைச் சேர்ந்த நால்வரே இக்கொலையில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூரு வழக்கொன்றில் சிக்கிய லப்லு மற்றும் நிஷிக்கு தேஜ்மண்டல் உதவ மறுத்ததோடு, அவர்கள் இரவும் பகலும் உழைத்த பணத்திற்கும் சரியான சம்பளம் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். போதாகுறைக்கு, நிஷியுடன் தேஜ்மண்டலுக்கு இருந்த தவறான உறவு மற்றும் சம்பள பாக்கி ஆகியவற்றால் ஆத்திரமடைந்த தம்பதியினர், அவரைக் கொன்று நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டினர்.

திட்டமிட்டபடி, நால்வரும் சேர்ந்து தேஜ்மண்டலை வளைத்துப் பிடித்து, சேலையால் அவரது கை, கால்களை இறுக்கக் கட்டி, வாயில் துணியைத் திணித்து மூச்சுத்திணற அடித்துக் கொன்றனர். பின்னர் சடலத்தைச் சூட்கேஸில் அமுக்கி வைத்துவிட்டு, நகை மற்றும் ரொக்கப் பணத்துடன் அங்கிருந்து நைஸாகத் தப்பினர். சிசிடிவி பதிவுகள் மூலம் அஸ்தம்பட்டி போலீசார் கொலையாளிகளை அடையாளம் கண்டபோதிலும், இந்தக் கும்பல் பெங்களூரு வழியாகத் தங்களது சொந்த நாடான வங்கதேசத்திற்கே தப்பி ஓடிவிட்டது.

ஐந்து ஆண்டுகளாகக் காவல்துறையின் கண்ணில் மண்ணைத் தூவி தலைமறைவாக வாழ்ந்த நிஷி, மீண்டும் ஆள் அடையாளத்தை மாற்றி ரகசியமாக இந்தியாவுக்குள் ஊடுருவினார். புனேவில் பதுங்கிய அவர், கர்நாடகாவைச் சேர்ந்த பரசுராம் நாடார் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டு, பெண் குழந்தையோடு குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில், சேலம் மாநகர கமிஷனரின் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், ரகசியத் தகவலின் அடிப்படையில் புனே பறந்து நிஷியை அதிரடியாகக் கைது செய்தனர். சேலத்திற்கு அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிஷி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தப்பியோடிய லப்லு, ஷீலா மற்றும் ஓஷி ஆகிய மூவரையும் பிடிக்கத் தனிப்படை போலீசார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.

Nanthini

Recent Posts

விபத்துனு நினைச்சா பெருங் கொள்ளை… சினிமா பாணியில் அரங்கேறிய ரூ.14 லட்சம் ஸ்கெட்ச்… நடுரோட்டில் மோதிய ஸ்கூட்டர்… வெளியானது அதிர்ச்சி CCTV…!!

டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…

2 மணத்தியாலங்கள் ago

“என் பொண்ணு கூட பழகுவியா?”… நள்ளிரவில் வீடு புகுந்து வெறிச்செயல்… மகளின் கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய தந்தை… வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!!

மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…

2 மணத்தியாலங்கள் ago

“பைக்கும் செயினும் தரலையா?”… பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கணவர்… வரதட்சணை கேட்டு கொடுமை… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!!

சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…

2 மணத்தியாலங்கள் ago

“அம்மா நான் எந்த தப்பும் பண்ணல!”… கதறிய மகள்… கருவி சொன்ன பொய்… ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து கதறி அழுத தாய்… மருத்துவமனையில் உடைந்த மர்மம்…!!

வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…

2 மணத்தியாலங்கள் ago

அதிசயமா? தெய்வத்தின் அவதாரமா?… ஆற்றில் கிடைத்த விசித்திர தாடைக்கல்… சாமி என திரண்டு வணங்கும் மக்கள்… நடந்தது என்ன?…!!

மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…

2 மணத்தியாலங்கள் ago

வீடு திரும்பாத தந்தை… துப்பாக்கியை காட்டி மிரட்டிய கும்பல்… சகோதரிகளுக்கு நேர்ந்த கொடூரம்… அதிரடி வேட்டையில் சிக்கிய காமுகர்கள்…!!

பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…

2 மணத்தியாலங்கள் ago